வீட்டின் பெயரோ அன்னை இல்லம் - ஆனால்
அன்னை இருப்பதோ அனாதை இல்லம்...
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புதான்....
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனிதா!! எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை....
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை,
துன்பத்தை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்விகள் இல்லை....
எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ,
அந்த பொருளினால் உனக்கு துன்பமும் இல்லை....
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும்
அதற்கு நாம் பொருப்பில்லை.....
ஆனால் அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்க
வேண்டும் என்பதற்கு முழுப் பொறுப்பும் நாமேதான்...
உன்னைத் தியாகம் செய்தால் மட்டுமே,
பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்...
உன் மனம் நோகும்போது சிரி,
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை....
சிலருக்கு மழைத் துளி பிடிக்கும்...
சிலருக்கு பனித் துளி பிடிக்கும்....
யாரையாவது உண்மையாக நேசித்துப் பாருங்கள்,
கண்ணீர் துளிக்கூட பிடிக்கும்....
No comments:
Post a Comment