சீர்குலைந்து கிடக்கும் எங்கள் வாழ்வை
சீர்செய்ய போவது யார்?
சிந்தனையை கிளர்கிறது மனம்…
கைக்கூலியாக வந்த என்னினம்
சமத்துவம்பெரும் நாள் எப்பொழுது?
அட்டை கடிக்கும்,
பாம்பு கடிக்கும், கஷ்டப்பட்டு
அடிமையான என் சமுதாயம் விழிப்பு
அடைவது எப்படி, எப்பொழுது?
தலையில்போட்ட விதியென்றும்
தர்மம் செத்துபோச்சினு புலம்பி
தனிமையில் வீரவசனம் பேசி…
மலைபோல குவிந்திருக்கும் குற்றங்கள்
மரணசாசனங்களின் குவியல்களில்
மனசாட்சிகளின்றி…
தெளிவு பெறாத துயர்கள் தூரப்போகும்
தெளிந்த சிந்தனைகள் மனதில் பதியும்
காலம் அதன் கடமையை
கட்டாயம் செய்யும்!
No comments:
Post a Comment