Wednesday, February 18, 2009

"தானம்"

கண்டதை உற்று நோக்கும் கண்களை
தானம் செய்!!

காதலுக்காக சிந்தும் ரத்தத்தை
தானம் செய்!!

கேளிக்கையில் மிந்தும் உணவை
தானம் செய்!!

ஏழைக்கு இலவசமாக கல்வியை
தானம் செய்!!

நண்பர்களுக்கு பூப்போன்ற மனதை
தானம் செய்!!

உன் பாதிக்கு உண்மையான கற்பை
தானம் செய்!!

தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை
தானம் செய்!!

உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"
தானம் செய்!!

இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல்
நிதானமாய் செய்!!.......

With Regards

Sathish Sarma.S

No comments:

Post a Comment