Monday, May 25, 2009

என்னை கவர்ந்த சில வரிகள்

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை....
ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம்...
"கன்னத்தில் கொசு கடி!!!"
செடியில் பூக்கும் மலரைவிட,
ஒரு நொடியில் பூக்கும்
"புன்னகை"தான் அழகு....
சவப்பெட்டி அழுகிறது,
இறந்தது மனிதன் தானே...,
என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று...?
சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்புதான்,
கருப்பு மனிதனுக்கும் இரத்தம் சிவப்புதான்....,
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
மனிதா,,,,,,
எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை....!
"உன்னை" "சந்திக்காமல்" "இருக்க" "முடியும்",,,,
"ஆனால்" "உன்னை" "சிந்திக்காமல்" "இருக்க" "முடியாது",,,,,,,
"That" "Is" "Friendship",,,,
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்...
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்...
ஆனால் யாரையாவது உண்மையாக
நேசித்து பாருங்கள்,,,
கண்ணீர் துளிக்கூட பிடிக்கும்!
கண்களில் இடம் பிடித்த அனைத்தும்,
இதயத்தில் இடம் பிடிப்பது இல்லை.....!
இதயத்தில் இடம் பிடிக்கும் அனைத்தும்,
கண்களில் தென்படுவதில்லை....!
"கருவரையை" விட்டு கீழே இறங்கி....
"கல்லறைக்கு" செல்லும் தூரம்தான்...
"வாழ்க்கை"....
மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் செல்லாதீர்கள்...
உங்களின் பாத சுவடுகள் தெரியாமல் போய்விடும்......
"பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்"......!
"நீ அருகில் இருந்து சண்டைப் போடு போதும்...",
அதுதான் நட்பின் ஆழம்....
அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்....
பாவம் அதுக்கு தெரியாது,,,,
பிரிவு அன்பை அதிகமாக்கும் என்று....!!!
கடைசி வரைக்கும் கஷ்ட்ட படாமால் இருக்க "ஒரு வழி....",
"இன்று முதல் கஷ்ட்டப்படு...."
செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள்தான்...
ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் நிலையானது....
நம் நட்பைப்போல.....!!!!
இறைவன் படைத்த உலகில் மனிதன் வாழ்கிறான்....!
மனிதன் வடித்த சிலையில் இறைவன் வாழ்கிறான்....!!!!

No comments:

Post a Comment